நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகும் ‘இதயம் முரளி’ எனும் இந்த புதிய திரைப்படத்தில், நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளதுடன், ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தங்கமே தங்கமே’ பாடல் இன்று (ஜனவரி 28) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
