மோகன்லாலின் ‘L367’ வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

சமீப காலமாக, ஒருபுறம் மிகப்பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஒரு அல்லது இரண்டு வெற்றிப்படங்களை அளித்த இளம் இயக்குநர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். இந்த அணுகுமுறை, அவரது திரைப்படத் தேர்வுகளில் ஒரு புதிய சமநிலையை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டு இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘தொடரும்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தருண் மூர்த்தி அதற்கு முன்பே இரண்டு சிறிய அளவிலான வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மோகன்லால் தற்போது தனது 367-வது திரைப்படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய திரைப்படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்க, விஷ்ணு மோகன் இயக்குகிறார். விஷ்ணு மோகன், 2022 ஆம் ஆண்டு உன்னி முகுந்தன் தயாரித்து கதாநாயகனாக நடித்த ‘மேப்படியான்’ திரைப்படத்தை இயக்கியவர். அந்த படம் மிதமான வெற்றியையும் நல்ல வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து, உன்னி முகுந்தன் அவருக்கு ஒரு காரை பரிசளித்திருந்தார். அதன் பின்னர் ‘கத இன்னுவர’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய விஷ்ணு மோகன், அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், தனது மூன்றாவது படத்திலேயே மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading