பாலிவுட் பாட்ஷா என திரையுலக ரசிகர்களால் போற்றப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். இந்திய திரையுலகத்தை மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர், உலக சினிமா அரங்கில் ஒரு பிரம்மாண்டமான அடையாளமாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஜாய் விருது விழாவில் ஷாருக்கான் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம், அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்த்தது.
அதற்கு முக்கிய காரணம், அந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.13 கோடி என்பதே. 18 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம், 54 வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி அப்டிசியன் டயல் கொண்ட இந்த கடிகாரம், ஒளியின் தன்மைக்கு ஏற்ப நிறங்கள் மாறும் சிறப்பு அம்சத்தையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய வகை கைக்கடிகாரம், மிக முக்கியமான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
உலகளவில் மிகச் சிலரிடம் மட்டுமே காணப்படும் இந்த கைக்கடிகாரம், ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்தமான கைக்கடிகாரங்களில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான், அவர் அணியும் ஒவ்வொரு முறையும் இந்த கடிகாரம் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
