வசனங்கள் இல்லாமல் விஜய் சேதுபதி – அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடர்ந்து, இந்த மூவரும் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ள புதிய திரைப்படம் தான் ‘காந்தி டாக்ஸ்’.

வசனங்கள் எதுவுமின்றி, முழுமையாக மௌனப் படமாக உருவாக்கப்பட்டுள்ள ‘காந்தி டாக்ஸ்’, டார்க் காமெடி ஜானரில் அமைந்துள்ள படம் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை கிஷோர் பி. பெல்லேக்கர் இயக்கியுள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், காந்தி நினைவுதினமான வருகிற 30-ம் தேதி உலகளவில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தற்போது ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading