சமூக வலைதளங்களில் சாதனைப் படைத்த அல்லு அர்ஜுன் – லோகேஷ் படத்தின் அறிவிப்பு வீடியோ!

‘புஷ்பா’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மூலம் இந்திய அளவிலும், வெளிநாட்டு சினிமா ரசிகர்களிடையிலும் பெரும் புகழை பெற்றவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். தனது தனித்துவமான நடிப்பு பாணி மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்து வரும் அவர், தற்போது தொடர்ந்து தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தற்போது அல்லு அர்ஜுனின் 22வது திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரது 23வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது. அந்த அறிவிப்புடன் ஒரு சிறப்பு வீடியோவும் வெளியிடப்பட்டது.

காமிக்ஸ் வடிவில் உருவாக்கப்பட்ட அந்த அறிவிப்பு வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த காமிக் ஸ்டைல் கேரக்டர் வடிவமைப்பும், பின்னணியில் பயன்படுத்தப்பட்ட தீம் இசையும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் விளைவாக, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அந்த காமிக் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைதளங்களில் ஏராளமான ரீல்ஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இவ்வளவு அதிகமான ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டிருப்பது சாதனையாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அனிருத் இசையமைத்த இந்த தீம் இசை தெலுங்கு சினிமா ரசிகர்களிடையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இணையும் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழிலும் உருவாக உள்ளதாக கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading