கடந்த சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’ மற்றும் பிரபாஸ் நடித்த ‘தி ராஜா சாப்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியிடப்பட்டன.
அதில், சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் சிறப்பு தோற்றத்தில் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து, வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்த திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருவதுடன், சங்கராந்தி வெளியீடுகளில் முக்கியமான வெற்றியாகவும் அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘பகவந்த் கேசரி’, ‘சங்கராந்தி கி வஸ்துனம்’ போன்ற படங்களின் தொடர்ச்சியான வெற்றிகளைத் தொடர்ந்து, சிரஞ்சீவியுடன் இணைந்து மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பாராட்டாக, நடிகர் சிரஞ்சீவி இயக்குநர் அனில் ரவிபுடிக்கு விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரை பரிசாக வழங்கியுள்ளார்.
