‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் அக்சய் குமார், கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் அக்சய் குமாருடன் இணைந்து எல்.கே. அக்சய் குமார், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்சய் குமார் நடிக்கும் இந்த படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘ராவடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். ‘ராவடி’ திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
