பாரதிராஜாவால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகா, சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ராதிகா நடிப்பில் வெளியாகி வெற்றித்திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘தாய்க்கிழவி’ திரைப்படத்தைப் பாரதிராஜா பார்த்து ரசித்துள்ளார். இந்த சந்திப்பின் போது படத்தில் ராதிகாவின் எதார்த்தமான நடிப்பைக் கண்டு வியந்த பாரதிராஜா, ’உனக்கு தேசிய விருது கிடைக்கணும்’ என்று அவரை பாராட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add a Comment
