ரீ ரிலீஸான ‘மங்காத்தா’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன?

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மறுவெளியீட்டு வசூல் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படம் நேற்று (ஜனவரி 23) தமிழகமெங்கும் 400-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக மீண்டும் வெளியானது.

எதிர்பார்த்ததுபோலவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அஜித் ரசிகர்கள் ‘மங்காத்தா’ மறுவெளியீட்டை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களாக இந்த படத்தை பார்த்த பலரும், இன்று 30 வயதை கடந்த நிலையில் மீண்டும் திரையில் அதே படத்தை காணும் போது மிகுந்த நெகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ‘மங்காத்தா’ திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ.5.5 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading