நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இயக்கத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த திரைப்படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது.
கல்யாண வீட்டை மையமாகக் கொண்டு கலகலப்பான கதைக்களத்தில் உருவான இந்த படம், நடிகர் ஜீவாவுக்கு ஒரு முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், படத்தில் இடம்பெற்ற ‘கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கடா’ என்ற வசனம் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமம் பெறப்பட்டிருப்பது திரையுலகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
