நடிகை வர்ஷா பொல்லம்மா கதையின் மையக் கதாபாத்திரமாகவும் டைட்டில் ரோலாகவும் நடித்த ‘கான்ஸ்டபிள் கனகம்’ என்ற வெப் சீரிஸின் முதல் சீசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் கடந்த ஜனவரி 8-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தது.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், ‘கான்ஸ்டபிள் கனகம்’ தொடரின் மூன்றாவது சீசனை வெப் சீரிஸ் வடிவில் வெளியிடாமல், நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படமாகவே உருவாக்கி வருகின்றனர் படக்குழுவினர். இந்த முடிவு திரையுலக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மிஸ்டரி திரில்லர் ஜானரில் கடந்த இரண்டு சீசன்களையும் விறுவிறுப்பாக இயக்கிய இயக்குநர் பிரசாந்த் குமார் டிம்மலா, மூன்றாவது சீசனையும் திரைப்பட வடிவில் அதே வேகத்துடனும் சுவாரஸ்யத்துடனும் ரசிகர்களுக்கு வழங்க தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.
