நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வடசென்னை’ திரைப்படத்தின் கதையுலகத்துடன் தொடர்புடைய படமாக ‘அரசன்’ உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, சில நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
‘வடசென்னை’ உலகத்துடன் தொடர்புடைய கதையாக இருந்தாலும், நடிகர் தனுஷ் சிறையில் இருக்கும் காலகட்டத்தில் ‘அரசன்’ படத்தின் கதைக்களம் நடைபெறுகிறது. இதில் இடம்பெறும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிகுந்த மிரட்டலாக இருக்கும் என தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
