தமிழில் ‘பிரம்மன்’, ‘சிவப்பு’, ‘பட்டாஸ்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘லெவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நவீன் சந்திரா. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் தற்போது ‘ஹனி’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் கருணகுமார் இயக்கியுள்ளார். இதில் திவ்யா பிள்ளை, திவி வத்யா, ராஜா ரவீந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஹனி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, இந்த படத்தின் டீசரை நடிகர் நவீன் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
