நடிகர் விக்ரம், ‘வீர தீர சூரன் – 2’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘மாவீரன்’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பொடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு ஆக்சன் கதையம்சத்துடன் உருவாகவுள்ள இந்த திரைப்படம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
