மீண்டும் இணைந்த சுந்தர் சி – விஷால் கூட்டணி… வெளியான முக்கிய அறிவிப்பு!

இயக்குநர் சுந்தர்.சி தற்போது நடிகை நயன்தாராவை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது ஒருபுறம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், மற்றொரு புறம் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தின் பணிகளும் தொடங்கியுள்ளன.

‘ஆம்பள’, ‘ஆக்‌ஷன்’, ‘மத கஜ ராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு, நான்காவது முறையாக நடிகர் விஷாலும் இயக்குநர் சுந்தர்.சியும் இந்த புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த கூட்டணியை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த புதிய படத்தின் முதல் பார்வை புரொமோ வீடியோ இன்று, ஜனவரி 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading