மலையாள திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இந்த திரைப்படத்தில் நடிகை கயாது லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 1950ஆம் காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
