கடந்த ஆண்டு மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் தொடர்ச்சியாக திரையரங்குகளில் ஓடி, மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ.230 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்ததாக தகவல் வெளியானது. சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படம் உருவாகும் என நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மோகன்லாலின் 366வது திரைப்படமாக உருவாகும் இந்த புதிய படத்திற்கான துவக்க விழா பூஜை, கேரளாவின் வைக்கம் மகாதேவ கோவிலில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் துவங்கி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக மோகன்லாலுடன் பல படங்களில் நாயகியாக நடித்துள்ள மீரா ஜாஸ்மின், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹிருதயப்பூர்வம்’ படத்தில் கிளைமாக்ஸ் பகுதியில் ஒரு நிமிடம் மட்டுமே தோன்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, இந்த புதிய படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக முழு நீள கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
