‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் தற்போது ‘மக்கள் காவலன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் இருப்பதாகவும், தொடர்ந்து பிஸியான நடிகராக அவர் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டில் இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘ஜே. பேபி’ திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று, இயக்குநர் சுரேஷ் மாரியின் பெயரையும் கவனிக்கத்தக்க வகையில் உயர்த்தியது.
‘ஜே. பேபி’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, சுரேஷ் மாரி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
