100 கோடி வசூலை குவித்த சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்களின் எழுச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாக ‘பராசக்தி’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. சென்சார் சான்றிதழ் பெறும் பணியில், இந்த படத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையேயும், திரையுலக வட்டாரங்களிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading