அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள புதிய மலையாள திரைப்படம் ‘சத்தா பச்சா’. பிரபல இசையமைப்பாளர்களான ஷங்கர்–இஷ்ஸான்–லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. ‘சத்தா பச்சா’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் டிக்கெட்டை நடிகர் மோகன் லால் வாங்கியுள்ளதாக அறிவிக்கும் வகையில், படக்குழு சார்பில் ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில், முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
