தற்போது வரை எனக்கு எந்த காதலும் இல்லை… நடிகை ருக்மிணி வசந்த் OPEN TALK!

‘காந்தாரா’ படத்திற்குப் பிறகு, இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக ருக்மிணி வசந்த் உயர்ந்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து ‘நேஷனல் கிரஷ்’ என்ற பெயரிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ‘மதராஸி’ படத்திலும் நடித்துள்ள ருக்மிணி வசந்த், அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ருக்மிணி வசந்த் காதலில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இளைஞர் ஒருவருடன் அவர் இருக்கும் புகைப்படமும் வைரலானது. ஆனால், இந்த தகவல்களை ருக்மிணி வசந்த் முற்றிலும் மறுத்துள்ளார். நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை சிலர் தவறான தகவல்களுடன் இணைத்து பரப்பியுள்ளதாக கூறியுள்ள அவர், தற்போது வரை காதலில் இல்லை என்றும், எதிர்காலத்தில் காதல் ஏற்பட்டால் அதை ரசிகர்களிடம் நிச்சயமாக பகிர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply