ஒரே நேரத்தில் உருவாகும் 34 தமிழ் திரைப்படங்கள்!

‘கல்லூரி’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன். அவர் இயக்கிய ‘டூ லெட்’ திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து கவனம் பெற்றது. இதுதவிர, சினிமாவை மையமாகக் கொண்டு பல புத்தகங்களையும் எழுதியுள்ள செழியன், தற்போது ‘பிலிம் ஸ்கூல்’ என்ற திரைப்பட பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவரது திரைப்படப் பள்ளியில் பயின்று வரும் 34 மாணவர்கள், ‘வழித்துணை’, ‘சுழற்சி’, ‘மத்தி’, ‘உறுதுணை’, ‘அடவி’, ‘கிடை’, ‘சேவ் த கேட்’, ‘மயில’, ‘செல்போன்’, ‘அருகன்’, ‘கிடை’, ‘லகடு’, ‘ரைடர்’, ‘குடை வள்ளல்’, ‘மியாவ்’, ‘நேற்றைய நிலா’, ‘தணல்’, ‘வார் கிட்ஸ்’, ‘தாழ்’, ‘கூடு’, ‘பசி’, ‘தீவிரவாதி’, ‘கண்ணாயிரம்’, ‘ஓட்டம்’, ‘தம்மம்’, ‘பழகு’, ‘மோகன மதில்’, ‘நிசப்தம்’, ‘கடைசி எல்லை’, ‘மௌனி’, ‘தாழ்’ உள்ளிட்ட மொத்தம் 34 சுயாதீன திரைப்படங்களை இயக்க உள்ளனர்.

இந்த திரைப்படங்களின் மற்றும் இயக்குநர்களின் அறிமுக விழா வருகிற 24-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத், எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading