கடைசிக் கட்ட படப்பிடிப்பில் ஜெயிலர் 2… கேரளாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் நேரில் அதிரப்பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, அவர் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுவே ரஜினிகாந்த் பங்கேற்கும் கடைசி படப்பிடிப்பு பகுதியாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் முதல் சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கத் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் அதிக நட்சத்திர நடிகர்கள் நடித்த திரைப்படமாக ‘ஜெயிலர் 2’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தவிர, சிவராஜ்குமார், மோகன்லால், பாலகிருஷ்ணா, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், மிதுன் சக்ரவர்த்தி, யோகி பாபு, சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணா, மிர்னா, அன்னா ராஜன் உள்ளிட்ட நடிகைகளும் படத்தில் இடம் பெற்றுள்ளனர். சந்தானம் இந்த படத்தில் நடிக்கிறாரா என்பது இன்னும் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது. மேலும், நேரா பதேஹி ஒரு பாடலுக்காக சிறப்பு நடனமும் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading