நடிகை மிருணாள் தாகூர்-ஐ தனுஷுடன் தொடர்புபடுத்தி திருமண வதந்தி பரவியது. இருவரும் பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இரு தரப்பிலும் இந்த தகவலை தெளிவாக மறுத்து, அந்த செய்தி முற்றிலும் உண்மையற்றது என்றும் தெரிவித்தனர்.
இந்த வதந்திகளுக்குப் பிறகு, மிருணாள் தாகூர் தற்போது தனது திரைப்பட பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்துள்ளார். “புத்தாண்டு, புதிய ஸ்கிரிப்ட், புதிய ஆரம்பம்” என்ற வரிகளுடன், தற்போது தாம் ஐதராபாத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள், இது அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கான அப்டேட்டாக இருக்கலாம் என்றும், சிலர் இது மிருணாள் தாகூரின் அடுத்த புதிய திரைப்படம் குறித்த தகவலாக இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
