‘துரந்தர்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் துரந்தர் 2 படத்தின் டீஸர் அப்டேட் வெளியானது!

நடிகர் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் – 2’ படத்தின் டீசர் வெளியீட்டுக்குத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.1300 கோடிகளைத் தாண்டி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பான் இந்திய மொழிகளில் வெளியாகாமல், ஹிந்தியில் மட்டும் திரைக்கு வந்து இந்த அளவிலான இமாலய வெற்றியை பெற்றது இந்திய திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வருகிற மார்ச் மாதம் பான் இந்திய அளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, ‘துரந்தர் – 2’ படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் தயாராக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 1 நிமிடம் 48 விநாடிகள் நீளமுள்ள இந்த டீசர், முதலில் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட பின்னர் யூடியூபில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading