‘கலிபா’ படத்தில் பிரித்விராஜ்-க்கு வில்லனாக நடிக்கும் ‘கத்தி’ பட வில்லன்!

மலையாள திரையுலகில் மோகன்லாலை வைத்து உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘புலி முருகன்’ மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் இயக்குநர் வைசாக். தற்போது அவர் நடிகர் பிரித்விராஜை கதாநாயகனாக வைத்து ‘கலிபா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். வைசாக் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானதே பிரித்விராஜ் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த ‘போக்கிரி ராஜா’ திரைப்படம் மூலம் என்பதால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரித்விராஜுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘கலிபா’ திரைப்படம் தான் நீல் நிதின் முகேஷ் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் ஆகும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading