இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் 9-ஆவது திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையமைக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த புதிய திரைப்படத்தில் நடிகரும் நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளதாக, படக்குழுவினர் இன்று (ஜன. 17) வெளியிட்ட சிறப்பு வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு பிக்பாஸ் 3-ஆவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற நடிகர் கவின் மற்றும் நடன இயக்குநர் சாண்டியின் கூட்டணி, பார்வையாளர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ‘லோகா’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த சாண்டியின் நடிப்பு, ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.
