நடிகர் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள ‘மெஜந்தா’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
‘இஃக்லூ’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த புதிய திரைப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ள ‘மெஜந்தா’ திரைப்படத்தில், அஞ்சலி நாயர், ஆர்ஜே ஆனந்தி, அர்ச்சனா, பகவதி பெருமாள், படவா கோபி, சரத் ரவி, சௌந்தர பிரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் சாந்தனு நாயகனாக நடித்துள்ள ‘மெஜந்தா’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ளனர்.
