கவின் – நயன்தாரா நடித்துள்ள ‘Hi’… வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும் கவின், ‘நட்புனா என்ன தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி கவினின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நடித்த ‘லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கவினுக்கு மேலும் கவனத்தை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, ‘ஸ்டார்’, ‘கிஷ்’, ‘டாடா’, ‘ப்ளடி பக்கர்’, ‘மாஸ்க்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவற்றுள் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அவர் நடித்த டாடா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது.

தற்போது, இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை காதலிக்கும் இளைஞனை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.இந்த நிலையில், ‘Hi’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading