விறுவிறுப்பாக நடைபெறும் ‘ஜனநாயகன்’ முன்பதிவு… அதிரடி புரோமோ வீடியோ வெளியீடு!

முதல்வர் விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், பல்வேறு சவால்களை கடந்து வரும் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே, இப்படத்தின் வெளியீட்டிற்கான முன்பதிவு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மேலும், முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் புதிய அதிரடி புரோமோ வீடியோ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சட்டமன்றத்தில் முதலமைச்சராக விஜய் செயல்படும் காட்சிகளும், கோட் சூட்டில் முதலமைச்சர் தோற்றத்தில் அவர் தோன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த புதிய புரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading