கெத்து தினேஷ் நடித்துள்ள ‘கருப்பு பல்சர்’ பட ரிலீஸ் தேதியை அறவித்த படக்குழு!

பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் தினேஷ். ‘அட்டகத்தி’ படம் பெற்ற பிரமாண்ட வெற்றியின் காரணமாக, அவரது பெயருக்கு முன்பாகவே அந்த படத்தின் பெயர் இணைந்து ‘அட்டகத்தி தினேஷ்’ என்ற அடையாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து ‘விசாரணை’, ‘குக்கூ’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருடன் போலீஸ்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த அவர், தனது தனித்துவமான நடிப்பு திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ், சமீபத்தில் வெளியான மற்றும் நல்ல வரவேற்பை பெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் பாராட்டுகளை குவித்தார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் முரளி கிருஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading