நடிகர் அருள்நிதி மற்றும் நடிகை மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மை டியர் சிஸ்டர்’. இந்த படத்தில் அவர்களுடன் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அக்கா–தம்பி பாசத்தை மையக்கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரபு ஜெயராம், இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன.
இந்த நிலையில், ‘மை டியர் சிஸ்டர்’ திரைப்படம் இந்த ஆண்டின் கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
