அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் அவரது 23-வது படமாகும். இப்படத்தில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அசோக் செல்வனே இப்படத்தை தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, அதிரடி காட்சிகளுக்கு சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார்.
காதலையும் ஆக்ஷனையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘அன்பில் அவன்’, தற்போது அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே, படத்தை தணிக்கை செய்த குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
—
