இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நந்திதா ஸ்வேதா!

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான நந்திதா ஸ்வேதா, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘புலி’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

தான் நடித்த‘ரத்தம்’, ‘ரணம்’ படங்களுக்குப் பிறகு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பாததால் பல வாய்ப்புகளைத் தவிர்த்ததாக நந்திதா தெரிவித்துள்ளார். இடைவெளி ஏற்பட்டாலும் ரசிகர்கள் தன்னை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், ‘அட்டகத்தி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ படங்களில் நடித்தது போன்ற அழுத்தமான கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கன்னடப் படமொன்றில் ஆக்‌ஷன் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply