“மலையாளத்தில் ரோமாஞ்சம்”, “ஆவேசம்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ஜீத்து மாதவன். குறிப்பாக, பஹத் பாசில் நடிப்பில் வெளியான “ஆவேசம்” திரைப்படம் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “சீன்” படத்தை ஜீத்து மாதவன் இயக்கியுள்ளார். இதில் நஸ்ரியா கதாநாயகியாகவும், “பிரேமலு” புகழ் நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதையை முதலில் பஹத் பாசிலுக்காக எழுதியதாக ஜீத்து மாதவன் தெரிவித்துள்ளார். வழக்கமான உரையாடலின்போது பஹத்திடம் கதையைக் கூறியதாகவும், அவருக்கும் அது பிடித்திருந்ததாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், பின்னர் கதையின் போக்கைக் கருத்தில் கொண்டு அதை சூர்யாவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடிவு செய்ததாகக் கூறினார்.
இதுகுறித்து பஹத் பாசிலிடம் தெரிவித்தபோது அவரும் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் சூர்யாவைச் சந்தித்துக் கதை கூறியதாகவும் ஜீத்து மாதவன் தெரிவித்தார். கதை பிடித்திருந்ததால் சூர்யாவும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
