டாக்ஸிக் படத்தில் நடிக்க நயன்தாரவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் – 2 திரைப்படத்தில் நடித்துள்ள நயன்தாரா, ஒரே நேரத்தில் பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். கன்னடத்தில் நடிகர் யஷுடன் டாக்சிக் படத்திலும், மலையாளத்தில் பேட்ரியாட் மற்றும் டியர் ஸ்டூடன்ட் ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள மன சங்கர வர பிரசாத் காரு திரைப்படம், வருகிற ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் டாக்சிக் திரைப்படத்தில், நடிகர் யஷின் அக்காவாக ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் மூலம் அவர் ஒரு ஸ்டைலிஷான ஆக்சன் ரோலில் தோன்றுகிறார். அதே படத்தில் ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுடாரியா என மேலும் நான்கு நடிகைகள் நடித்திருந்தாலும், நயன்தாராவுக்கே கதையில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாக்சிக் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், இறுதியாக அவருக்கு 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading