‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீது தணிக்கை வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை அப்பட்டமான அநீதி – இயக்குனர் மாரி செல்வராஜ் பளீச்!

‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய இரு திரைப்படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ‘பராசக்தி’ படத்தில் சில இடங்களில் உள்ள வசனங்களை மியூட் செய்வதும், சில காட்சிகளை முழுமையாக நீக்குவதும் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்த பிறகு, மத்திய திரைப்படத் தணிக்கைத்துறை அந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ‘பராசக்தி’ திரைப்படம் முன்கூட்டியே திட்டமிட்டபடியே இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதற்கு மாறாக, நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கு வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில், வழக்கு தள்ளிப்போனதால் அவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “ஜனநாயகன் திரைப்படத்தின் மீது தணிக்கைத்துறை மேற்கொண்டிருப்பது அப்பட்டமான அநீதியே. ஒரு படைப்பாளி என்ற வகையில், இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதன் மூலம், நம் ஜனநாயகத்தின் மீதும், நம் படைப்புச் சுதந்திரத்தின் மீதும் வேகமாக பரவி வரும் பேரச்சத்தை துடைத்தெறிய அனைவரும் ஒன்றாக பெருங்குரலெழுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading