மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தமிழில் நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படமும் வெளிவந்ததால், ரஜிஷா விஜயனுக்கு தமிழில் ஒரு வலுவான அறிமுகம் கிடைத்தது. இந்த இரண்டு படங்களுமே அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் திரைப்படத்திலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில், நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அதே நேரத்தில் கவர்ச்சிக்கு இடமில்லாத வேடங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தவர் ரஜிஷா விஜயன் என்பதே அவரது தனிச்சிறப்பாக இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது மலையாளத்தில் மதிஸ்கமரணம் என்ற திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கோமளா தாமரை என்ற பாடலின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாடலில், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முறையில், கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் ரஜிஷா விஜயன் ஒரு மேடை நடனத்தை ஆடியுள்ளார். இந்த தோற்றம் ரசிகர்களிடையே, உண்மையிலேயே இது ரஜிஷா விஜயன் தானா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கவனம் ஈர்த்துள்ளது.
