ஒரு நடிகையாக என்னை நானே ஆராய்ந்து பார்க்கும் பயணம் மிகவும் மகிழ்ச்சி தருகிறது – நடிகை மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது திரைப்பட அனுபவங்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், மலையாள சினிமாவில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் நடித்துள்ளேன். தமிழில் விக்ரமுடன் ‘தங்கலான்’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அதேபோல், தெலுங்கு சினிமாவில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வெவ்வேறு ஜானர்களில் உருவாகும் படங்களில் நடிப்பதும், பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றுவதும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். ‘தங்கலான்’ திரைப்படத்தில் பழங்குடி தெய்வமாக நடித்துள்ளேன். ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் புனேவைச் சேர்ந்த ஒரு யதார்த்தமான நகரத்துப் பெண்ணாக நடித்தேன். ‘தி ராஜா சாப்’ படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் எனவும் அவர் விளக்கியுள்ளார்.

இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்களில் தொடர்ந்து நடித்துவருவதன் மூலம், ஒரு நடிகையாக என்னை நானே ஆராய்ந்து பார்க்கும் பயணம் மிகவும் பிடித்திருக்கிறது என்றும் மாளவிகா மோகனன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading