ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு தன்னை பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள் சிலரை சந்தித்து, அவர்களுடன் உரையாடி அனுப்பி வைத்துள்ளார் பிரபாஸ்.இதுகுறித்து அவரை சந்தித்த ஸ்ரீலேகா என்கிற ரசிகை ஒருவர் பிரபாஸுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு, “நாங்கள் அவரை சந்திக்க சென்றபோது வீட்டு காம்பவுண்ட் கேட்டுக்கே வந்து எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் பிரபாஸ். அந்த அளவிற்கு மிக எளிமையான மனிதராக இருந்தார். அவருக்கு நான் ஒரு சிறிய அளவிலான பகவத் கீதை புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தேன்.. மேலும் அவருக்கென சில பரிசு பொருட்களை சேர்த்து வைத்திருந்தேன். அதையும் அவரிடம் கொடுத்த போது அதை பெற்றுக்கொண்டு ஆர்வமாக வாங்கி பார்த்தார். இதைவிட ஒரு ரசிகைக்கு வேறு என்ன வேண்டும்? என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

