சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழும் அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங்கிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீப காலமாக சர்வதேச அளவிலான பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அபுதாபி ரேஸிங் களத்தில் நடிகர் அஜித் குமாரை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

