தனது உதவி இயக்குனரின் துரந்தர் படத்தின் வெற்றியை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட இயக்குனர் பிரியதர்ஷன்!

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய ஆக்ரோஸ் மற்றும் தேஷ் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதும் அளவிற்கு முக்கியமான உதவி இயக்குனராக மாறியவர் ஆதித்யா தர். தற்போது துரந்தர் படத்தின் மூலம் இவருக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மகிழ்ந்துள்ள இயக்குனர் பிரியதர்ஷன், “என்னிடம் இருந்து நல்ல குணாதிசயங்களுடன் தன்னை வளர்த்துக் கொண்ட ஒருவர் பெறும் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வெற்றியை பார்ப்பதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது. துரந்தர் படத்திற்காக என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் துரந்தர் 2 படத்திற்காக எனது வாழ்த்துக்கள் ஆதித்யா தர் என்று பாராட்டியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading