‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டிலும் சிக்கலா? உலாவும் புது தகவல்!

2026 பொங்கலை முன்னிட்டு நாளை ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படமும், 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படமும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தராத காரணத்தால் நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நாளை காலை 10 மணிக்கு மேல் தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜனநாயகன் பட வெளியீடு தள்ளிப்போய் விட்டது.

‘பராசக்தி’ படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்து நீக்கப்பட வேண்டியவற்றை சொல்லிவிட்டார்களாம். அவற்றை மாற்றித் தரும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்களாம். அதில் திட்டமிட்ட நேரத்தை விட தாமதம் ஏற்பட்டுள்ளதாம். அதை முடித்து தணிக்கை வாரியத்திடம் ஒப்படைத்த பின்புதான் அவர்கள் சான்றிதழ் வழங்குவார்களாம். இதன் நிலை என்னவென்பதும் நாளை தெரிந்துவிடும் என்கிறார்கள். அதனால், நாளை படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். ஆனால் படக்குழு தரப்பில் இதுகுறித்து உறுதிப்படுத்தபட வில்லை. இன்னும் 2 நாட்களில் பராசக்தி ரிலீஸ் என்ற போஸ்டர் மட்டும் வெளியிட்டுள்ளனர். படத்திற்குன சென்சார் சான்றிதழ் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரையில் இல்லாததால் படம் 10ம் தேதி ரிலீஸ் ஆகுமா இல்லையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்..

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading