‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற தலைப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் இயக்க மதுமகேஷ் அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி ஸ்டூடியோஸ் மற்றும் டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கதையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், படத்தின் நாயகன் ஒருவரை விரும்பினால் உடனே அவரை கடத்திவிடும் பழக்கமுள்ளவராக சித்தரிக்கப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, ஹாரிஸ் ஜெயராஜ் மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக அவரை கடத்த முயலும் காட்சியுடன் வெளியான டைட்டில் அறிவிப்பு புரொமோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்தின் ‘உன் பார்வை’ என்ற பாடலை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். இந்த பாடல் மதன் கார்க்கி எழுதிய வரிகளில் உருவாகி, வினீத் ஸ்ரீனிவாசன், பிரகதி மற்றும் காயத்ரி ராஜீவ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
