பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் ‘திரெளபதி 2’

மோகன். ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ரக்‌ஷனா, நட்டி ஆகியோர் நடித்துள்ள ‘திரவுபதி 2’ திரைப்படம், முதலில் ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ ஆகிய படங்களின் சென்சார் குழப்பம் மற்றும் திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, பொங்கல் தினத்தன்றே இப்படம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது. இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களையும், திரையுலக வட்டாரங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

14-ம் நூற்றாண்டை மையமாகக் கொண்டு அமைந்த கதைக்களத்தில் ‘திரவுபதி 2’ உருவாகியுள்ளது. இப்படத்தில் போர் சம்பந்தமான காட்சிகள் மற்றும் பல வரலாற்று உண்மை நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பாடகி சின்மயி பாடிய ‘எம்கோனே’ பாடலை படத்திலிருந்து நீக்கியுள்ளதாக இயக்குநர் முன்பே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலை தற்போது யார் பாடியுள்ளார் என்ற விவரம் நாளை வெளியாகும் டிரைலர் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading