சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக கூறுகள் இணைக்கப்பட்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தை ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading