நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பிரம்மயுகம். இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள திரையுலகில் பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு, சமூகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கங்களையும் மேட்டிமைத்தனங்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படம், வெளியானதிலிருந்தே சிறந்த விமர்சனங்களை பெற்றது. கதையின் ஆழமும், காட்சிப்படுத்தலின் நுட்பமும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்காக, நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. அதேபோல், இந்தப் படத்திற்காக படக்குழுவினருக்கு மொத்தமாக நான்கு விருதுகள் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்காவில் அமைந்துள்ள ஆஸ்கர் மியூசியத்தின் மதிப்புமிக்க திரையரங்கில், இந்த திரைப்படம் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரையிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது, “நான் வளர்ந்த காலத்தில் கேட்ட கதைகளிலிருந்தே ‘பிரம்மயுகம்’ உருவானது. அந்தக் கதைகளில் இருந்த பயமும், அதன் அமைதியும் இன்றும் என்னை விட்டு விலகாமல் இருக்கிறது. நிலம், மொழி ஆகிய எல்லைகளைத் தாண்டி அந்த உணர்வு பிரதிபலிக்கும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த படத்திற்கு உயிரூட்டிய நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. ஆஸ்கர் மியூசியத்தில் நடைபெறும் ‘Where the Forest Meets the Sea’ என்ற தொடரில் திரையிடப்படும் ஒரே இந்திய திரைப்படமாக ‘பிரம்மயுகம்’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி இந்த படம் திரையிடப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
