நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவாவின் திரைப்பயணத்தில் இது 45-வது திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ளார்.

‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற தலைப்புடன் வெளியான இந்த படத்தின் முதல் போஸ்டர், ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரார்தனா நடித்துள்ளார். அவருடன் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரில், கரூர் பைபாஸ் தொடர்பான ஒரு காட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ், “படிச்சு படிச்சு சொன்னேனே, கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கன்னு” என்று பேசும் வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கவனத்தை பெற்றது.
