2016 ஆம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதனைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை அவர் இயக்கினார். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானதாக இருந்தாலும், மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது, அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன் ஜி இயக்கி முடித்துள்ளார். இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் ‘திரௌபதி தேவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரித்திர காலப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய பாடலான ‘தராசுகி ராம்’ பாடலின் புரோமோ நேற்று வெளியான நிலையில், இந்த பாடலின் முழு வீடியோவை தற்போது வெளியாகியுள்ளது.
