20 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் சீமானின் ‘தம்பி’ திரைப்படம்!

சமீப காலமாக 1990கள் மற்றும் 2000களில் வெளியான பல ஹிட் திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தின் வரிசையில், இயக்குநர் சீமான் எழுதி இயக்கிய ‘தம்பி’ திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது.

அதாவது, சீமான் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்துத் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தம்பி’ திரைப்படம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகை பூஜா, நகைச்சுவை நடிகர் வடிவேலு, மணிவண்ணன் மற்றும் பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், ‘தம்பி’ திரைப்படத்தை வருகிற பிப்ரவரி மாதம் மீண்டும் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading